பரபரப்பு... சாந்தி நிகேதனில் மியான்மர் மாணவர் கடத்தல்!

கடத்தல் கும்பல்
கடத்தல் கும்பல்
Updated on
1 min read

மேற்கு வங்கத்தில் இருந்து கடத்தப்பட்ட மியான்மரைச் சேர்ந்த பிஎச்டி மாணவர் ஒடிசாவில் மீட்கப்பட்டுள்ளார். அவரைக் கடத்தியது தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மியான்மரை சேர்ந்த மாணவர், மேற்கு வங்க மாநிலம், சாந்தி நிகேதனில் உள்ள விஸ்வ பாரதியில் பிஎச்டி படித்து வந்தார். இந்த நிலையில் மியான்மர் மாணவரை ஒரு கும்பலால் கடத்தப்பட்டார். இதையடுத்து அவரது செல்போன் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது கடத்தப்பட்ட மியான்மர் மாணவர், ஒடிசாவில் உள்ள பாலசோரில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உள்ளூர் போலீஸார் உதவியுடன் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மிட்னாபூர் போலீஸார் அங்கே சென்ற போது அந்த மாணவர் ஒரு அறையில் கட்டி வைக்கப்பட்டிருந்தார். அவரை மீட்ட போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட 12 பேரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

பணத் தகராறு காரணமாக மாணவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனறு போலீஸார் சந்தேகப்படுகின்னர். கைது செய்யப்பட்ட 12 பேரில் மூன்று பேர் துப்ராஜ்பூரைச் சேர்ந்தவர்கள் என்றும், எட்டு பேர் மிட்னாபூரைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in