ஜே.இ.இ நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது... 23 மாணவர்கள் 100% தேர்ச்சி!

ஜே.இ.இ நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள்
ஜே.இ.இ நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள்

மத்திய அரசின் பொறியியல்  உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு நடத்தப்படும்  தகுதித்தேர்வான  ஜே.இ.இ  நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 

ஐஐடி
ஐஐடி

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் சேரவும், மேலும்  பல தனியார் பல்கலைக்கழகங்களில் பொறியியல் படிப்புகளில் சேரவும்  ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என 2 பிரிவுகளாக நடைபெறுகிறது. ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்ஐடி, ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேரலாம். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஐஐடி கல்லூரிகளில் சேரலாம். இந்தியாவில் உள்ள பல பெரிய பல்கலைக்கழகங்களும் இந்த தேர்வின் அடிப்படையில் மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன.

நுழைவுத் தேர்வு
நுழைவுத் தேர்வு

இந்த ஆண்டு ஜேஇஇ மெயின் தேர்வுக்கு 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர்.  முதன்மைத் தேர்வு அமர்வு 1 ஜனவரி 24, 27, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1, ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்காக பதிவு செய்த 12,21,615 பேரில் 11,70,036 பேர் தேர்வெழுதினர். இந்தநிலையில் முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.  இதில் இம்முறை மொத்தம் 23 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதன்மைத் தேர்வில் பங்கேற்ற 11 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை jeemain.nta.ac.in  மற்றும் jeemain.nta.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளங்களில் இன்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். 2-ம் அமர்வுக்கான நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 2 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 4 ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!

‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!

கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in