சூப்பர் அறிவிப்பு... கல்வித் தகுதிக்கேற்ப ஊக்கத்தொகை... அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!

அரசு ஊழியர்கள்.
அரசு ஊழியர்கள்.

மாநில அரசு ஊழியர்களின்  கூடுதல் கல்வித் தகுதிக்கு அரசின் சார்பில் ஊக்கத்தொகை வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள் தங்களது பணிக்காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ஊக்க ஊதிய உயர்வை வழங்குவது குறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மத்திய அரசால் அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளின் அடிப்படையில் இந்த ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும்.

அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்கள்

அதன்படி, அரசு ஊழியர்களில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.25,000 ஊக்க ஊதியத் தொகையும், பட்ட மேற்படிப்பு அல்லது அதற்கு சமமான படிப்பு படித்தோருக்கு ரூ.20 ஆயிரமும், பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு படித்திருந்தால் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்" என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10.03.2020-க்கு முன் பணியில் சேர்ந்து உயர்கல்வி படித்தோருக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in