இந்தியாவில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முஸ்லிம்கள் எத்தனை பேர்?... அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்!

மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியம்
மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியம்

மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய 2023 சிவில் சர்வீஸ் தேர்வில் சுமார் 50 முஸ்லிம்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்துகிறது. இந்த தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்), இந்திய வெளியுறவு சேவை (ஐஎஃப்எஸ்), இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) மற்றும் பிற மதிப்பிற்குரிய அரசுப் பணிகளுக்கான பதவிகளுக்கு அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நுழைவாயிலாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவுகிறது.

சிவில் சர்வீஸ் தேர்வு
சிவில் சர்வீஸ் தேர்வு

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட முதன்மை தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுக்கு, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், 1,016 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டனர்.

பொது பிரிவில் 347 பேர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் 115 பேர், ஓபிசி பிரிவில் 303 பேர், எஸ்.சி பிரிவில் 165 பேர், எஸ்.டி பிரிவில் 86 பேர் என மொத்தம் 1,016 பேர் வெற்றியடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட 1,016 பேரில் 664 பேர் ஆண்கள், 353 பேர் பெண்கள் ஆவார்கள்.

ஆனால், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,016 பேரில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 50 பேர் தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற முஸ்லிம்களின் எண்ணிக்கை 4.9 சதவீதம் தான். கடந்த ஆண்டுடன் இதை ஒப்பிடும் போது சதவீதம் அதிகரித்திருந்தாலும், இன்னும் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது.

தேர்வு எழுதியவர்கள்
தேர்வு எழுதியவர்கள்

முந்தைய ஆண்டுகளில் கூட, இந்த சதவீதம் 2 முதல் 6 சதவீதம் வரை இருந்தது, இது இந்தியாவில் முஸ்லிம் மக்கள்தொகை சதவீதத்தை விட கணிசமாகக் குறைவாகும். கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17.22 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்து.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in