கல்வியின் நாயகி காலமானார்... கேரள முதியோர் கல்வியில் சாதித்த 101 வயது மூதாட்டி!

கேரளா கார்த்தியாயினி அம்மா
கேரளா கார்த்தியாயினி அம்மா

கல்வி கற்பதில் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி கார்த்தியாயினி காலமானார். அவருக்கு வயது 101.

முதியோர் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் கேரளா எழுத்தறிவு இயக்கத்தின் கீழ் ‘அக்ஷரா லக்ஷம்’ எனும் திட்டத்தில் கல்வி கற்ற மிகவும் வயதான நபர் என்ற பெருமையை பெற்ற மூதாட்டி கார்த்தியாயினி 2018ல் நடந்த தேர்வில் 98 சதவீத மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

கேரளா கார்த்தியாயினி அம்மா
கேரளா கார்த்தியாயினி அம்மா

முதுமையில் கல்வி கற்று இந்த சாதனையால் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கார்த்தியாயினி. இவரை சந்தித்த இந்திய பிரதமர் மோடியே வணங்கி வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in