படிப்படியாக பழைய பென்ஷன் திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார். முன்னதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது சிரமம் என கூறியிருந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷின் பேட்டி, அரசு ஊழியர்களுக்கு ஆறுதலான செய்தியாகியுள்ளது.

திருவாரூரில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா இன்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ். அப்போது, திமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால் இப்போது அது முடியாது எனச் சொல்கிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ்,”திமுக ஆட்சிக்கு வரும் போது 5.75 லட்சம் கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை இருந்தது. அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் அதில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார். அதனால் தான் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. பழைய பென்ஷன் திட்டம், படிப்படியாக அமல்படுத்தப்படும் ” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in