உள்நாட்டிலேயே முதல் முறையாக நீரிலும், நிலத்திலும் செல்லும் வகையில் ஹோவர் கிராஃப்ட் படகு ஒன்றை கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்து அசத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த ராவத்தூர் பகுதியைச் சேர்ந்த யூரோடெக் சொல்யூஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் ட்ரில்லிங் மெஷின், கிரைண்டிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களைத் தயாரித்து 45-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக நீரிலும், நிலத்திலும் இயங்கும் வகையில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஹோவர் கிராஃப்ட் படகைத் தயாரித்துள்ளது.
இதன் சோதனை ஓட்டம் சூலூரில் உள்ள சின்ன குளத்தில் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு படை பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது. ஹோவர் கிராஃப்ட் படகு நீரில் சீறிப்பாய்ந்ததை அருகில் இருந்த குடியிருப்புவாசிகள் ஆர்வத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து தரையிலும் அதே வாகனம் பயணித்ததைக் கண்டு அவர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்தனர்.
இதுகுறித்து யூரோடெக் சொல்யூஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுப்ரதா சந்திரசேகர் கூறுகையில், ”நாட்டிலேயே முதல்முறையாக நீர் மற்றும் நிலத்தில் இயங்கும் வகையில் ஹோவர் கிராஃப்ட் படகை தயாரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
நீர் மற்றும் நிலத்தில் அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் வேகத்திலும் பனி படர்ந்த இடங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லும் வகையில் இந்த ஹோவர் கிராஃப்ட் படகு வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
மேலும், “கனடாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹோவர் கிராஃப்ட் புயல் வெள்ளம் உள்ளிட்ட பாதிப்பு பகுதிகளில் மீட்பு நடவடிக்கைக்காகவும், கடலோர பாதுகாப்பு, மற்றும் கப்பற்படையின் கண்காணிப்பு பணிகளுக்காகவும், அவசர காலங்களில் மருத்துவத் தேவைக்காகவும் பயன்படுத்த முடியும். ஒரு மணி நேரத்திற்கு 20 முதல் 25 லிட்டர் வரை எரிபொருள் செலவாகும்” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா
நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத அக்கா, தம்பி!
அடுத்த சர்ச்சை... தேசிய கீதத்தை அவமானப்படுத்திய மன்சூர் அலிகான்!
மன்சூர் அலிகான் தப்புன்னா... ரஜினி பேசுனதும் தப்பு தான்!
அடாவடி வசூல்... கழிவறை கட்டண குத்தகைதாரருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பு!