குட்நியூஸ்; தமிழ்நாட்டில் மார்ச் 1-ல் தொடங்குகிறது பொதுத்தேர்வு: அட்டவணை வெளியீடு!

தேர்வு எழுதும் மாணவிகள்
தேர்வு எழுதும் மாணவிகள்

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை திட்டமிட்டபடி இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 1-ம் தேதி முதலே தேர்வுகள் தொடங்குகின்றன.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வுகள் குறித்த  அட்டவணையை இன்று காலை வெளியிட்டார் அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வுகள் 2024-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 8-ம் தேதி முடிவடைகிறது. பதினோராம் வகுப்பு தேர்வுகள்  மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 25- ம் வரை நடைபெறுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1-ம் தேதியே தொடங்கி மார்ச் 22- ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வுகளை எழுதுவதற்கு வசதியாக அதற்கு சில நாட்கள் முன்னதாகவே செய்முறை தேர்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள்  பிப்ரவரி 12-ம் தேதி  தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

பதினோராம் வகுப்புக்கான  செய்முறை தேர்வுகள்  பிப்- 19 முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகின்றன. பத்தாம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியிடப்படும் என்றும், பதினோராம் வகுப்புக்கு மே 14-ம் தேதி என்று முடிவுகள் வெளியிடப்படும் என்றும், பத்தாம் வகுப்புக்கு மே பத்தாம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டாம். நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வாக வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in