பள்ளி - கல்லூரிகள் தொடர்ந்து செயல்படுமா?

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை
கோப்புப் படம்
கோப்புப் படம்

கரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.

தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று சற்று குறைந்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகளை வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளைப் பொறுத்தவரை 9 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதியளிக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் உற்சாகமாகப் பள்ளிக்கு வந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை, தஞ்சை, நீலகிரி, திருவாரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னையிலும் பள்ளி மாணவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று மாலை தலைமைச் செயலாளர் இறையன்பு, காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளை நடத்துவதா, ஆசிரியர்களுக்கு 100 சதவீதம் தடுப்பு ஊசி , அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுதல் உட்பட பல்வேறு ஆலோசனைகள் நடைபெற உள்ளன. ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகே பள்ளி, கல்லூரிகளைத் தொடர்ந்து திறப்பதா அல்லது மீண்டும் ஆன்லைன் மூலம் கல்வி கற்பிப்பதா என்பது குறித்து முடிவு தெரியவரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in