முதுகலை நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 30 முதல் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
முதுகலை நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 30 முதல் விண்ணப்பிக்கலாம்

வரும் கல்வியாண்டில் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

வரும் கல்வியாண்டில் எம்பிஏ, எம்சிஏ, எம்.இ, எம்.டெக், எம். பிளான், எம்.ஆர்க் ஆகிய படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. அதில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு முதுகலைப் பட்டம் பயில்வதற்கான சேர்க்கை அளிக்கப்படும்.

டான்செட் (TANCET) என்ற அந்த நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.