அரசுப் பள்ளிகளில் இருந்து 20,60,340 மாணவர்கள் அதிரடி நீக்கம்... அதிகாரிகள் சொல்லும் விநோத காரணம்!

பீகார் அரசுப் பள்ளி மாணவர்கள்
பீகார் அரசுப் பள்ளி மாணவர்கள்

மாநிலத்தின் அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 20 லட்சம் மாணவர்களை, கல்வித்துறை அதிகாரிகள் நிரந்தமாக நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பீகாரில் இந்த விசித்திரம் அரங்கேறி வருகிறது.

கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கிய கணக்கெடுப்பின் கீழ் மாநிலத்தின் 75,309 அரசுப் பள்ளிகளில் பயிலும் 20,60,340 மாணவர்கள் நிரந்த நீக்கத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இவர்களில் 2.66 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத வேண்டியவர்கள்.

பீகார் அரசுப்பள்ளி மாணவர்கள்
பீகார் அரசுப்பள்ளி மாணவர்கள்

கல்வித்துறை அதிகாரிகளின் ஏற்பாட்டின்படி, தொடர்ந்து 15 நாட்களுக்கு பள்ளிக்கு வராத மாணவர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பள்ளிக்கு வராத காரணம் குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வசம் விசாரிக்கப்பட்டது. உரிய காரணம் இருப்பின், பெற்றோர்களின் கடிதத்தோடு மீண்டும் பள்ளியில் சேர அனுமதிக்கப்பட்டார்கள். அவ்வாறு திரும்பி வராத மாணவர்களை அரசுப் பள்ளிகளில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்காக அரசுப் பள்ளிகளில் சேர்க்கை மேற்கொள்ளும் மாணவர்கள் அங்கே படிப்பைத் தொடராது, அவர்களது பெற்றோரின் ஏற்பாட்டின்படி வேறு ஊர்களின் தனியார் பள்ளிகளில் சேர்ந்து பள்ளிப்படிப்பை தொடர்கிறார்கள். இதனால் ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் உதவித் திட்டங்களுக்கான ரூ3000 கோடியில் கணிசமான கோடிகள் விரையமாகின்றன.

அரசுப்பள்ளி மாணவிகள்
அரசுப்பள்ளி மாணவிகள்

முறைகேடாக அரசு சலுகைகளை பெறும் சுமார் 10 சதவீத மாணவர்கள் கண்டறியப்பட்டு, பள்ளியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டாலே வருடத்துக்கு ரூ300 கோடி மிச்சமாகும். இதுதான் கல்வித்துறை அதிகாரிகள் சொல்லும் கணக்கு.

ஆனால், மாணவர்கள் பள்ளிக்கு வராததன் பின்னணியில் இதர காரணங்களை கல்வித்துறை ஆராயவில்லை என கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதில், குழந்தை தொழிலாளர்களாக சென்ற மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்பவில்லை. அவர்களை அரசு முறையாக கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


மிஸ் பண்ணாதீங்க ... ஆவின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வேன்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்!

நடிகை அமலாபால் 2வது திருமணம்... லிப் கிஸ் கொடுத்து காதலனை அறிமுகப்படுத்தினார்!

பகீர்... திமுக பிரமுகர் மகன் படுகொலை; சென்னையில் பரபரப்பு!

பிரபல நடிகையின் மகன் மர்ம மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in