பெற்றோர்கள் கவனத்திற்கு... சென்னையில் இன்று கல்விக்கடன் சிறப்பு முகாம்!

பெற்றோர்கள் கவனத்திற்கு... சென்னையில் இன்று கல்விக்கடன் சிறப்பு முகாம்!
Updated on
1 min read

சென்னையில் இன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாணவ மாணவியர் அவர்களது பெற்றோருடன் வந்து பயன்பெறலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுத் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’தமிழக அரசும், வங்கிகளும் இணைந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கல்விக்கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்ட மாணவர்களுக்காக லயோலா கல்லூரியில் இன்று மாபெரும் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கல்விக்கடன் விண்ணப்பம், தேவையான வருமானச் சான்றிதழ், விண்ணப்பம் மற்றும் பான்கார்டு ஆகியவை இ-சேவை மையம் மூலம் முகாமிலேயே விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் அனைத்து மாணவ, மாணவியரும், பெற்றோரும் பங்கேற்று பயனடையலாம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in