பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்... நவ.2-ல் திறனறி தேர்வு!

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

தமிழக பள்ளிகளில் பயிலும் 3, 6 மற்றும் 9- ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிடும் திறனறி தேர்வு நவம்பர் 2-ம் தேதி நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை வளர்க்கவும், பள்ளிகளில் தரமான கற்றல் சூழலை உருவாக்கவும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அனைத்து குழந்தைகளும் படிப்பதற்கான சிறந்த இடமாக அரசுப் பள்ளிகள் மாறி வருகின்றன. பெற்றோர்கள் பலரும் அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிகளில் பயிலும் 3, 6, மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிட எஸ்இஏஎஸ் என்ற திறனறி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை நவம்பர் 2-ம் தேதி நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த தேர்வை 7.42  லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இந்த தேர்வுக்காக இருபது பள்ளிகளுக்கு ஒருவர் வீதம் 1356 பேர்  வட்டார ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in