நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு - அரசு கடும் எச்சரிக்கை!

சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி
சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி

சின்னசேலம் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் நாளை முதல் வேலை நிறுத்தம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் இன்று உச்சகட்ட கலவரம் வெடித்தது. மாணவி படித்த கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி நுழைந்த வன்முறையாளர்கள் பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட அனைத்தையும் தீவைத்து எரித்தனர் பள்ளி வளாகம் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டது பள்ளியின் மேகிய நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் சூறையாடப்பட்டன மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் நாசமாக்கப்பட்டன. இதற்கு தனியார் பள்ளி உரிமை அவர்கள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறைக்கு தங்கள் எதிர்ப்பை காட்ட விரும்பியுள்ள தனியார் பள்ளிகள் முதல் கட்டமாக வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நாளை முதல் பள்ளிகள் இயங்காது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு மெட்ரிகுலேசன், சிபிஎஸ் இ நர்சரி பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் பேசுகையில், “தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது. சின்னசேலம் சக்தி பள்ளியில் மாணவி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கின் விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இன்று சமூக விரோதிகள் பள்ளிக்குள் புகுந்து பேருந்து, ஜேசிபி, டிராக்டர், கார்களை தீக்கிரையாக்கி இருக்கிறார்கள். பள்ளியில் ஆய்வகம், விடுதி, மாணவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளிக்கு 50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கம்யூட்டர், மேசைகள், மின்விசிறிகள் திருடப்பட்டுள்ளன.

இதே நிலை நீடித்தால் தனியார் பள்ளிகள் நாங்கள் என்ன செய்வது. தமிழகத்தில் 20 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. இதற்கு யார் பாதுகாப்பு தருவது, அரசே எங்களை கைவிட்டால் யாரிடம் மன்றாடுவது. எனவே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விதிகளை மீறி பள்ளிகள் விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in