9 வயது மாணவியின் 9 நூல்கள்

கோவையில் 9 இடங்களில் ஒரேநாளில் வெளியீடு
ஹரிவர்ஷினி, வர்ஷினி
ஹரிவர்ஷினி, வர்ஷினிபடம்: கேயெஸ்வி

மழலைக்குரல் இன்னமும் மாறவில்லை. ஒன்பது வயதுதான். பள்ளியில் நான்காம் வகுப்புதான் படிக்கிறார் ஹரிவர்ஷினி ராஜேஷ். ஆனால், கடந்த 6 மாதங்களில் 11 சிறுகதை நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். தனது 9 நூல்களை கோவையில் 9 இடங்களில் வைத்து ஒவ்வொன்றாக வெளியிட்டு கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஹரிவர்ஷினி.

குடும்பத்தினருடன் ஹரிவர்ஷினி
குடும்பத்தினருடன் ஹரிவர்ஷினிபடம்: கேயெஸ்வி

இந்தக் கரோனா காலத்தில் பெரிய எழுத்தாளர்களே புத்தகம் அச்சடித்து வெளியிட தயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தச் சின்னஞ்சிறு சிறுமியால் எப்படி இதைச் செய்ய முடிந்தது எனக் கேட்டால் வியப்பாக இருக்கிறது.

ஹரிவர்ஷினியின் அப்பாவும் அம்மாவும் பள்ளி மற்று கல்லூரி ஆசிரியர்கள். இவர்களே, ஹரிவர்ஷினியின் உள்ளுக்குள் இருந்த ஆற்றலை வெளிக்கொண்டு வர காரணமானவர்கள். கூடவே, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஹரிவர்ஷினியின் சகோதரி வர்ஷினி இந்த நூல்களுக்கு ஓவியம் வரைந்துள்ளார். தங்கையின் எழுத்தார்வத்தைப் பார்த்து வர்ஷினியும் இப்போது கதை எழுதத் தொடங்கியிருக்கிறார்.

இதுபற்றி ஹரிவர்ஷினியின் பெற்றோர் ராஜலட்சுமி, ராஜேஷ் இருவரும் நம்மிடம் பேசுகையில், “குழந்தைப் பருவத்திலிருந்தே என் குழந்தைகளுக்கு கதை சொல்லியும், பாட்டுப்படித்தும் வளர்த்தோம். சின்னவள் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே கற்பனையில் கதை சொல்ல ஆரம்பித்து விட்டாள். அவள் சொல்லும் கதைகளை எழுதிப்பார்ப்போம். அதையே பின்னர் டைப்பிங் செய்ய ஆரம்பித்தேன். போன டிசம்பரில் அவள் கதை சொல்லச் சொல்ல நான் டைப் செய்து கதை தயாரித்தேன். முதல் நூலில் 18 கதைகளைத் தொகுத்து வெளியிட்டேன். நான் எழுதிய கதைத் தொகுப்பு நூல்களை வாங்கிப் பார்த்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியிடம் கொடுத்தோம். பாராட்டிய அவர், “அடுத்த நூல் வெளியீட்டுக்கு என்னை அழையுங்கள். என்ன வேலையிருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு வருவேன் என்று சொல்லி எங்களை உற்சாகப்படுத்தினார்’’ என்றனர்.

நூல் வெளியீடு காணொலி:

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in