1 முதல் 5-ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை!

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
1 முதல் 5-ம் வகுப்பு வரை
இறுதித்தேர்வு இல்லை!

தமிழ்நாட்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இறுதித் தேர்வு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 6- ம் தேதி முதல் மே 30- ம் தேதி வரை நடைபெறுகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9-ம் தேதி முதல், மே 31- ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 5-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதர வகுப்புகளுக்கான தேர்வு தேதி குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு மே 5-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும். 9-ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் மே 2 முதல் 4-ம் தேதி வரை நடைபெறும். 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் 30-ம் தேதி வெளியிடப்படும். 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு இறுதித்தேர்வு இல்லை.

நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13-ம் தேதி ஆகும். 2022-23-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜுன் 13-ம் தேதி தொடங்கும். அதேசமயம் 11-ம் வகுப்புக்கு மட்டும் ஜுன் 24-ம் தேதி வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.