சிபிஐ அதிரடி... கே.வி பள்ளியில் முறைகேடாக 193 மாணவர்கள் சேர்ப்பு... லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிய முதல்வர்!

விசாகப்பட்டினம் கேந்திரிய வித்யாலயா பள்ளி
விசாகப்பட்டினம் கேந்திரிய வித்யாலயா பள்ளி

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தகுதியற்ற மாணவர்களுக்கு போலிச்சான்றிதழ் மூலம் சேர்க்கை வழங்கிய விசாகப்பட்டினம் கேவி பள்ளி முதல்வரை சிபிஐ வளைத்துள்ளது.

ஸ்ரீனிவாச ராஜா என்பவர் ஆந்திர மாநிலம் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 கல்வியாண்டுகளில் முறைகேடாக 193 மாணவர்களுக்கு, தான் பணியாற்றும் கே.வி பள்ளியில் சேர்க்கை வழங்கியுள்ளார். இதற்கு ஆதாயமாக மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து லட்சங்களில் லஞ்சம் பெற்றுள்ளார்.

சிபிஐ விசாரணை
சிபிஐ விசாரணை

பல்வேறு மத்திய அரசுத் துறைகள் வழங்கியதாக போலியான சான்றிதழ்களை தயாரித்து இந்த முறைகேடுகளுக்கு ஸ்ரீனிவாச ராஜா பயன்படுத்தியுள்ளார். கடந்த 2022-23-ம் கல்வியாண்டில் 124 மாணவர்கள் மற்றும் அதற்கு முந்தைய 2021-22-ம் கல்வியாண்டில் 69 மாணவர்கள் என மொத்தம் 193 மாணவர்களுக்கு முறைகேடாக சேர்க்கை வழங்கியுள்ளார்.

பெற்றோர்கள் வசமிருந்து லஞ்சத் தொகையை தனது பெயரிலான 2 வங்கிக் கணக்குகளுக்கு யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக முதல்வர் ராஜா பெற்றிருப்பதை சிபிஐ கண்டறிந்துள்ளது. ராஜாவுக்கு எதிரான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டதும், கேந்திரிய வித்யாலயா சங்க்தான் ஆணையரிடம் அனுமதி பெற்ற சிபிஐ, பள்ளி முதல்வருக்கு எதிராக 2 எஃப்ஐஆர்களை பதிவு செய்துள்ளது.

சிபிஐ
சிபிஐ

மேலும், இந்த முறைகேடுகளில் முதல்வர் ஸ்ரீனிவாச ராஜாவுக்கு அப்பால் வேறு எவருக்கேனும் தொடர்பு உள்ளதா என்றும், சிபிஐயின் அடுத்தக்கட்ட விசாரணைகளை தொடர்ந்துள்ளன. கேந்திரிய வித்யாலயாவில் 193 முறைகேடான சேர்க்கைகளுக்கு இடமளித்ததன் மூலம், தகுதி வாய்ந்த மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்திருப்பதாகவும் ராஜாவுக்கு எதிராக, வாய்ப்பிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் தனியாக திரண்டுள்ளனர்.

இதனிடையே, விசாகப்பட்டினம் பள்ளி பாணியில் இதர கே.வி பள்ளிகளிலும் முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றுள்ளதா எனவும் சிபிஐ விசாரணையின் போக்கு திரும்பியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in