வள்ளலார் நெற்றியில் திருநீறு எங்கே? - உதயநிதியின் பிறந்தநாள் வாழ்த்தால் உருவான சர்ச்சை!

வள்ளலார் நெற்றியில் திருநீறு எங்கே? - உதயநிதியின் பிறந்தநாள் வாழ்த்தால் உருவான சர்ச்சை!

வள்ளலார் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இப்பதிவில் உள்ள வள்ளலார் நெற்றியில் திருநீறு இல்லாதது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், “பிறப்பால் சாதி வேறுபாடு காண்பதைக் கண்டித்து, எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும் என்ற புரட்சித் துறவி வள்ளலாருக்கு இன்று 200ஆம் ஆண்டு பிறந்தநாள்!. சூழ்ச்சிகளால் வரலாற்றை திரிப்பவர்கள், எவ்வளவு முயற்சித்தாலும் வள்ளலார் என்றுமே சமத்துவத்தின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்வார்.

உலகில் சகல துன்பங்களுக்கும் காரணம் பசிக்கொடுமை தான் என்றுணர்ந்த வள்ளலார் வடலூரில் அன்று மூட்டிய அணையா அடுப்பின் நெருப்பு ஒளி தான் இன்று பள்ளிகளில் காலை உணவு திட்டம் என பரந்திருக்கிறது. வள்ளலாரின் புரட்சிக் கருத்துகளை உலகறிய செய்வோம். நாமும் கடைப்பிடிப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவின் மூலமாக தமிழக ஆளுநரின் சனாதன கருத்துக்களுக்கு எதிராக மறைமுகமாக பதிவிட்டுள்ளதாக, இப்பதிவின் கமெண்டில் சிலர் கூறியுள்ளனர். மேலும் காலை உணவு திட்டம் குறித்தும் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் வள்ளலார் நெற்றியில் திருநீறு இல்லாத படத்தை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்ததை பலரும் விமர்சித்துள்ளனர். திருநீறு குறித்து பல்வேறு பாடல்களைப் பாடிய வள்ளலாரின் நெற்றியை நீறில்லாமல் பகிர்வதையும் பலர் விமர்சனம் செய்துள்ளனர். அதேபோல முதலில் ‘தனிப்பெருங்ருணை’ என்று தவறாக உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். இதுவும் விமர்சனத்துக்குள்ளானதால் அதன் பின்னர் ‘தனிப்பெருங்கருணை’ என அவர் பதிவை திருத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in