வெள்ளியங்கிரி... அப்படி என்ன தான் இருக்கிறது அந்த மலையில்?

வெள்ளியங்கிரி மலை கோயில்...
வெள்ளியங்கிரி மலை கோயில்...

கோவையை அடுத்துள்ளது பூண்டி வெள்ளியங்கிரி மலை. இங்குள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். அப்படி அந்த மலையில் இருக்கும் சிறப்புகள் என்ன?

வெள்ளியங்கிரி மலை
வெள்ளியங்கிரி மலை

கோவையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூண்டி வெள்ளியங்கிரி மலை. ஆன்மிக தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குவது வெள்ளியங்கிரி மலை. இங்கு பஞ்சபூதங்களும் ஒன்றிணைந்த வடிவமாக சிவன் காட்சி தருகிறார் என்பதால் ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் இங்குவந்து தரிசனம் செய்வது வழக்கம்.

வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் தாயார் மனோன்மணி அம்மன் என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார். இங்கு தியான லிங்கமும் உள்ளது. பக்தர்கள் முதலில் இங்கு வந்து வழிபட்ட பிறகே மலையேறிச் செல்கின்றனர். இதற்கு மேல் 3,500 அடி உயரம் கொண்ட ஏழு மலைகள் காணப்படுகின்றன. இந்த ஏழு மலைகளும், மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களை குறிப்பதாக ஐதீகம்.

வெள்ளியங்கிரி மலையில் நடந்து செல்லும் பக்தர்கள்...
வெள்ளியங்கிரி மலையில் நடந்து செல்லும் பக்தர்கள்...

ஏழாவது மலையின் உச்சியில் உள்ள குகையில் சுயம்பு லிங்கம் ஒன்று உள்ளது. வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை ஆகிய இடங்களை கடந்துதான் ஏழாவது மலையை அடைய முடியும்.

வெள்ளியங்கிரி மலையில் நடந்து செல்லும் பக்தர்கள்...
வெள்ளியங்கிரி மலையில் நடந்து செல்லும் பக்தர்கள்...

வெள்ளியங்கிரி மலை கோயில் அமைந்துள்ள இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் வன விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். எனவே மாலை 6 மணிக்கு மேல் நடை அடைக்கப்பட்டு விடும். எனினும் மலைக் கோயில் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான மாதங்களே வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல சரியான காலமாக சொல்லப்படுகிறது. மற்ற மாதங்களில் மழை, பனி காரணமாக பக்தர்கள் மலையேறிச் செல்ல வனத்துறை அனுமதிப்பது இல்லை. கோயிலுக்குச் செல்லும் இடம் முழுவதும் மலை என்பதால் அவ்வளவு எளிதில் மலை ஏற முடியாது. எனினும் பக்தர்கள் மகா சிவராத்திரி, சித்ரா பெளர்ணமி ஆகிய காலங்களில் வெள்ளியங்கிரிக்கு வருவார்கள். அண்மைக் காலமாக பிரதோஷ நாட்களிலும் சிலர் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

வெள்ளியங்கிரி மலையில் நடந்து செல்லும் பக்தர்கள்...
வெள்ளியங்கிரி மலையில் நடந்து செல்லும் பக்தர்கள்...

10 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வெள்ளியங்கிரி மலை ஏறக்கூடாது. மலையின் உச்சிக்குச் செல்லச் செல்ல ஆக்சிஜனின் அளவு குறைவாக இருக்கும் என்பதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயம் பலவீனமானவர்கள், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மலையேறி செல்வதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள்.

பக்தர்கள் மலை ஏறும் போது பனிப்புயல், மழை ஏற்பட்டால் அதற்குமேல் மலை ஏறாமல் திரும்பி வந்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தும் அண்மைக்காலமாக வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. அண்மையில்கூட மலையில் 5 பக்தர்கள் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே, இதையடுத்து இணை நோய் உள்ளவர்களும் பலகீனமானவர்களுக்கும் வெள்ளியங்கிரி மலை ஏறவேண்டாம் என வனத்துறை சார்பிலும், கோயில் நிர்வாகம் சார்பிலும் வலிறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in