நாளை திருப்பதியில் பிரம்மோற்சவம்; 2 லட்ச பக்தர்கள் நேரில் காண ஏற்பாடு!

திருப்பதி பிரம்மோற்சவம்
திருப்பதி பிரம்மோற்சவம்

நாளை செப். 18-ம் தேதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி செப்.26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாளை பிரம்மோற்சவ விழாவில் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் கலந்து கொள்கிறார்.

ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப். 18-ம் தேதி தொடங்கி செப்.26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாளைய பிரம்மோற்சவ விழாவில் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் கலந்து கொள்கிறார்.

திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பெருமாளைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். புரட்டாசியில் ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் புகழ்பெற்றது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள்.

திருமலை திருப்பதியில் அருளும் ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதுமே பல்வேறு விழாக்களும், உற்சவங்களும் நடைபெற்று வந்தாலும், புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாதான் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி காலை மற்றும் மாலையில் விதவிதமான வாகனங்களில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இந்த ஆண்டு நாளை செப்டம்பர் 18 முதல் 26 வரை பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நான்கு மாடவீதிகளில் 2 லட்சம் பக்தர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் மாநில அரசின் சார்பில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்று பட்டு வஸ்திரம் சமர்பிக்க உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in