ஆடி அமாவாசை : இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு!

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை

இந்துக்கள் பண்டிகையில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஆடி அமாவாசை. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று, தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். இதனால், ராமேஸ்வரம், திருச்சி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் திரளானோர் சாமி தரிசனம் செய்ய செல்வார்கள். பலர் குடும்பத்துடன் தங்கள் குல தெய்வ கோயில்களுக்கு சென்று பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள்.

அந்த வகையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை, தென்காசி மற்றும் தென் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோயில்களுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள அய்யனார் கோயிலில் தங்குவதற்கு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in