இன்று பெளர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்; சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

இன்று பெளர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்; சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
Updated on
1 min read

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு, பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட பல பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு பெளர்ணமியை முன்னிட்டு கூடுதல் சிறப்பு பேருந்துகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை கிரிவலம்
திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.  திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பெளர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பெளர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பெளர்ணமி இன்று செப்.28ம் தேதி வியாழக்கிழமை மாலை 6.47 மணிக்கு தொடங்கி மறுநாள் 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. எனவே இன்று இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிரிவலம்
கிரிவலம்

பெளர்ணமி கிரிவலமானது விடுமுறை தினத்தையொட்டி வருவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணியில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில்  இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கு ஏற்ப எல்லா ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in