திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்; இணையத்தில் நாளை வெளியீடு!

12 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டும் விற்பனை
திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயில்தி இந்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாத‌த்துக்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட், ஆன்லைனில் நாளை வெளியிடப்பட உள்ளது. பிப்ரவரி மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட், நாளை மறுநாள் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம், மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. இதை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா தொற்று பரவல் காரணமாக தேவஸ்தானம் திருப்பதியில் அளித்துவந்த நேரடி சர்வதரிசன இலவச டோக்கன்களை தற்காலிகமாக ரத்து செய்து, அவற்றையும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், பிப்ரவரி மாத‌த்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் நாளை வெளியிடப்படுகிறது. மொத்தம் 12 ஆயிரம் டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக, திருப்பதி-திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வீதம் என 28-ம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இலவச தரிசனத்துக்காக தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் 29-ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. எனவே பக்தர்கள், பிப்ரவரி மாதத்துக்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in