கெத்தாக கோயிலுக்குள் நுழைந்த அமைச்சர்... தடுத்து நிறுத்திய பெண் போலீஸ்!

அமைச்சரைத் தடுத்து நிறுத்தும் பெண் போலீஸ்
அமைச்சரைத் தடுத்து நிறுத்தும் பெண் போலீஸ்
Updated on
2 min read

கர்நாடகாவில் தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படும் ஹாசனாம்பாள் கோயிலில் வழிபட வந்த அமைச்சர் ஒருவர், பெண் போலீஸ்காரரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹாசனாம்பாள் கோயில்
ஹாசனாம்பாள் கோயில்

கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் ஹாசனாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில்  தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படும். தீபாவளி சமயத்தில் 10 நாட்களுக்கு மேலாக பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

மேலும் இந்த கோயிலின் இன்னொரு சிறப்பு,  கோயிலில் பூஜைகள் முடிந்து கதவு மூடும்போது உள்ளே விளக்கு ஏற்றி வைக்கப்படும். இந்த விளக்கு அடுத்த ஆண்டு தீபாவளிக்கு கோயிலை திறக்கும்போது வரை அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்.

இத்தகைய சிறப்பு கொண்ட இந்த கோயில் தீபாவளி பண்டிகையொட்டி கடந்த 2ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அம்மாநில  கலால்துறை அமைச்சர் ஆர்.பி. திம்மாபூர் நேற்று  கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றார்.

அப்போது கோயிலில் அதிகளவில் பக்தர்கள் இருந்தனர். குறிப்பாக விவிஐபி பாஸ் வைத்திருக்கும் ஏராளமானவர்களையும்  கோயில் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர். இதை பார்த்த அமைச்சர்  திம்மாபூர் தனது காரிலேயே அரை மணிநேரம் காத்திருந்தார். அதன்பிறகும் கூட கோயிலில் கூட்டம்  குறையவில்லை. இதையடுத்து அமைச்சர் மட்டும் காரில் இருந்து இறங்கி  கோயில் உள்ளே செல்ல முயன்றார்.

இந்த வேளையில் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் போலீஸ் ஒருவர்  அவரை தடுத்து நிறுத்தினார். அமைச்சர் அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை. அந்த இடத்திலேயே  அவர் காத்து நின்றார். இதனை அங்குள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் அந்த பெண் போலீஸிடம், சென்று அவர் அமைச்சர் ஆர்பி திம்மாபூர் என கூறினர்.

இதைக்கேட்டு அந்த பெண் போலீஸ் அதிர்ச்சியடைந்து அமைச்சரிடம் வருத்தம் தெரிவித்தார்.  இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அமைச்சர் திம்மாபூரை கோயிலுக்குள் அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தனர். இந்த சம்பவம் சிறிது நேரம் ஹாசனாம்பா கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் வாசிக்கலாமே... இன்று உலக கருணை தினம்... வெறுப்பு கரையட்டும்; கருணை பொங்கட்டும்!

ஈரோட்டில் அதிர்ச்சி! அதிகாலையில் கோர விபத்து... 3 பேர் உயிரிழப்பு!

பெரும் சோகம்... பட்டாசு வெடித்து சிதறியதில் 4 வயது சிறுமி உயிரிழிப்பு!

திருச்செந்தூரில் சஷ்டி விழா தொடங்கியது... 18ம் தேதி சூரசம்ஹாரம்!

300 டன் பட்டாசு குப்பை சேகரிப்பு... விடிய விடிய பணியாற்றிய 19,600 தூய்மைப் பணியாளர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in