களைக்கட்டும் தீபத்திருவிழா... அண்ணாமலையார் கோயிலை சுத்தம் செய்த அமைச்சர்!

சுத்தம் செய்யும் பணியில் அமைச்சர்
சுத்தம் செய்யும் பணியில் அமைச்சர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் தீபத்திருவிழா கடந்த 17ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், கிரிவலப்பாதையை அமைச்சர் எ.வ.வேலு சுத்தம் செய்தார்.

சுத்தம் செய்யும் பணியில் அமைச்சர்
சுத்தம் செய்யும் பணியில் அமைச்சர்

உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றாக கருதக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ம் தேதி 64 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், வருகின்ற நவம்பர் 26ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனை தொடர்ந்து அன்று மாலை 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த விழாவினை காண தமிழகம் மட்டுமல்ல வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வாடிக்கை.

இந்த தீபத் திருவிழாவை முன்னிட்டு அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிரிவலப் பாதை சரியாக சீரமைக்கப்படாமல் இருந்ததைக் கண்டு கடிந்துக் கொண்டார். இந்த நிலையில் இன்று காலை தானே களத்தில் இறங்கி, கார்த்திகை தீபத் திருவிழாவின் பிரதானமாக பார்க்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப் பாதையை அமைச்சர் சுத்தம் செய்தார். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக தானே களத்தில் இறங்கியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...


மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது... 4 மணி நேரம் அவகாசம் தர்றேன்... நடிகர் சங்கத்தை எச்சரித்த மன்சூர் அலிகான்!

உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ

பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!

ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in