நாளை ரோப்கார் சேவை நிறுத்தம்... பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

ரோப் கார் சேவை
ரோப் கார் சேவை
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவிலுக்கு பக்தர்களை ஏற்றி செல்லும் ரோப்கார் சேவை நாளை பரமாரிப்பு காரணங்களுக்காக நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பழனி முருகன் கோயில்
பழனி முருகன் கோயில்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை, ரயில் சேவை, ரோப்கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 5 நிமிடங்களில் மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப்கார் சேவை நாள்தோறும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும். மேலும் ரோப்கார் சேவை நாள்தோறும் பிற்பகலில் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு நாளும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக நிறுத்தப்படுகிறது.

பழனி கொடியேற்றம்
பழனி கொடியேற்றம்

அந்த வகையில், கோடை விடுமுறையை ஒட்டி, பழனிக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதாலும், வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப் காரின் சேவை நிறுத்தம் தொடர்பானஅறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, நாளை மார்ச் 28-ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள், மாற்றுப்பாதைகளை பயன்படுத்தி பழனி மலைக்கோவிலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in