பக்தர்கள் குவிந்தனர்... சபரிமலையில் இன்று நடைதிறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில், ஆண்டு தோறும் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜை மற்றும் நிறை புத்தரிசி பூஜை, வருடப் பிறப்பு போன்றவற்றிற்குத் திறக்கப்படுவது வழக்கம். மேலும், ஒவ்வொரு மாதப் பிறப்பின் போதும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

ஐப்பசி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து தீபம் ஏற்றி வைக்கவுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

இதை தொடர்ந்து வருகிற அக்டோபர் 18-ம் தேதி சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களுக்கான மேல் சாந்திகள் தேர்வு நடைபெற உள்ளது. குலுக்கல் முறையில் சீட்டை எடுப்பதற்காக வைதீவ் என்ற சிறுவனும், நிரூபமா ஸ்ரீ வர்மா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அக்டோபர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள்

அக்டோபர் 22-ம் தேதி இரவு 10 மணியளவில், ஐயப்பன் கோயிலின் நடை அடைக்கப்படும். வழக்கமாக இணைய முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையம் இன்று முதல் (அக்டோபர் 17) செயல்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in