சபரிமலை நடை திறப்பு: 19-ம் தேதிவரை தரிசிக்கலாம்

சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும் 19-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். பக்தர்கள் அதுவரை தரிசனம் செய்யலாம்.

சபரிமலையில் சீஸன் நேரத்தில் ஏற்படும் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் சபரிமலை நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து இரவு 7.30-க்கு திருநடை அடைக்கப்பட்டது. வேறு பூஜைகள் எதுவும் நடக்கவில்லை.

இன்று அதிகாலை 4.55-க்கு சபரிமலை சன்னிதான திருநடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நெய்யபிஷேகம், அபிஷேகம், உஜபூஜை, களாபிஷேகம், உச்சபூஜை, தீபாராதனை, அத்தாழ பூஜை ஆகியவை நடந்தன. வரும் 19 -ம் தேதி படி பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு திருநடை அடைக்கப்படுகிறது. இன்று முதல் 5 நாட்களுக்கு பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவின் வாயிலாக சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம். முன்பதிவு செய்யாமல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக நிலக்கல் பகுதியில் ஸ்பார்ட் புக்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in