சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு!

பி.என்.மகேஷ்
பி.என்.மகேஷ்

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக பி.என்.மகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அர்ச்சகராக பணியாற்ற ஆண்டுதோறும் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி, தேவசம் வாரியம் நடத்திய நேர்முகத் தேர்வில் இறுதி செய்யப்பட்டவர்களின் பெயர்களுடன், ஐயப்பன் கோயில் கருவறை முன்பு சீட்டுக் குலுக்கல் மூலம் ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக பரமேக்காவு பகுதியைச் சேர்ந்த பி.என். மகேஷ் தேர்வு செய்யப்பட்டார். மாளிகைபுரம் கோயில் மேல்சாந்தியாக பி.ஜி.முரளி தேர்வு செய்யப்பட்டதாக தேவசம் வாரியம் தெரிவித்துள்ளது.

பி.என். மகேஷ் - பி.ஜி.முரளி
பி.என். மகேஷ் - பி.ஜி.முரளி

இந்த வாய்ப்பிற்காக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்பதாக பி.என்.மகேஷ் கூறினார். ஐயப்பன் என்னை அவருக்குச் சேவை செய்ய அழைத்துள்ளதாகவும், அதற்கான வாய்ப்பை எனக்கு அளித்ததாகவும், இது என் முன்னோர்களின் ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன் என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in