திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் சாதனை: ஒரே மாதத்தில் 130 கோடி உண்டியல் வசூல்!

திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் சாதனை: ஒரே மாதத்தில் 130 கோடி உண்டியல் வசூல்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாற்றில் முதல் முறையாக பக்தர்கள் செலுத்திய ஒரு மாத உண்டியல் வருமானம் ரூ.130 கோடியைத் தாண்டியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் உண்டியல் வருமானம் அதிகரித்து வருகிறது. கோயிலுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1500 கோடி வரை உண்டியல் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூ.130 கோடியே 29 லட்சம் வந்துள்ளது.
திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் ஒரு மாதத்தில் அதிக அளவு தொகை வந்தது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இந்த மே மாதத்தில் 22.62 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 1.86 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 10.72 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in