ஜம்மு வைஷ்ணவி தேவி கோயிலில் திரவுபதி முர்மு சாமி தரிசனம்
ஜம்மு வைஷ்ணவி தேவி கோயிலில் திரவுபதி முர்மு சாமி தரிசனம்

வைஷ்ணவி தேவி கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு சாமி தரிசனம்!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலில் இன்று தரிசனம் செய்தார்.

காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று ஸ்ரீநகர் வந்தார். காஷ்மீர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். ஜம்முவில் ரியாசி மாவட்டம் காத்ரா நகரில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலுக்கு முர்மு இன்று சென்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜம்மு வைஷ்ணவி தேவி கோயிலில் குடியரசுத்தலைவர்  திரவுபதி முர்மு சாமி தரிசனம்
ஜம்மு வைஷ்ணவி தேவி கோயிலில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு சாமி தரிசனம்

அங்கு குடியரசு தலைவர் முர்மு, வைஷ்ணவி தேவியை வழிபாடு நடத்தி சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர், கோயிலில் பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள பார்வதி பவன் என்ற மிகப் பெரிய அறையையும் குடியரசுத் தலைவர் திறந்துவைத்தார். 2 நாள் காஷ்மீர் பயணத்தை முடித்துக் கொண்டு முர்மு நேற்று மாலை டெல்லி திரும்பினார்.

ஜம்மு வைஷ்ணவி தேவி கோயிலில் திரவுபதி முர்மு சாமி தரிசனம்
ஜம்மு வைஷ்ணவி தேவி கோயிலில் திரவுபதி முர்மு சாமி தரிசனம்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in