திருவண்ணாமலை தீபத்திருவிழா... 50 குளிர்சாதன பேருந்துகள் இயக்கம்! பக்தர்கள் மகிழ்ச்சி

குளிர்சாதனப்பேருந்து
குளிர்சாதனப்பேருந்து

திருவண்ணாமலையில் தீபத் திருவிழா நடைபெற இருப்பதை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 50 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் நடைபெறும்  தீபத்திருவிழாவை  முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்வார்கள். அவர்களின் வசதிக்காக பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. 

அந்த வகையில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும் குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய மூன்று தினங்களுக்கு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும்,  திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும் 50  எண்ணிக்கையில் குளிர்சாதனம் உள்ள இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

இந்த பேருந்துகளில் பயணம் செய்ய  முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிக்க இலகுவாக  குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படுவதால் அண்ணாமலையாரின் பக்தர்கள் அகமகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

அதுமட்டுமின்றி திருநெல்வேலி,  தூத்துக்குடி, நாகர்கோவில்,  மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் நவம்பர் 24 முதல் 26 ம் தேதி வரை இயக்கப்படும் என்றும் தமிழக அரசு போக்குவரத்துத்துறையின் அதிகாரபூர்வ இணையதளம் மாற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


இதையும் வாசிக்கலாமே...

உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ

பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!

ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in