நவ.18 தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்கார விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் நவ.18ம் தேதி அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருச்செந்தூர் முருகன் கோயில்
திருச்செந்தூர் முருகன் கோயில்

தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவற்றின்போது மக்களின் பாதுகாப்பு கருதி அந்தந்த பகுதிகளில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், வரும் நவம்பர் 18ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்கார விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த நேரங்களில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் வரும் 18ம் தேதி செயல்படாது எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதனை சரிச் செய்யும் வகையில் மாற்று வேலை நாள் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், விழாவில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று உலக கருணை தினம்... வெறுப்பு கரையட்டும்; கருணை பொங்கட்டும்!

ஈரோட்டில் அதிர்ச்சி! அதிகாலையில் கோர விபத்து... 3 பேர் உயிரிழப்பு!

பெரும் சோகம்... பட்டாசு வெடித்து சிதறியதில் 4 வயது சிறுமி உயிரிழிப்பு!

திருச்செந்தூரில் சஷ்டி விழா தொடங்கியது... 18ம் தேதி சூரசம்ஹாரம்!

300 டன் பட்டாசு குப்பை சேகரிப்பு... விடிய விடிய பணியாற்றிய 19,600 தூய்மைப் பணியாளர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in