அதிகாலையில் ஆயிரக் கணக்கில் திரண்ட பக்தர்கள்!

மயிலம் முருகன் கோயில் பங்குனி தேரோட்டம்
அதிகாலையில் ஆயிரக் கணக்கில் திரண்ட பக்தர்கள்!
மயிலம் தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்று வருகிறது.

திண்டிவனம் அருகே மயிலத்தில் உள்ள மயில் வடிவ மலையில் பழமையான முருகன் கோயில் உள்ளது. இங்கு வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமான் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருக்கின்றனர். ஆண்டு முழுவதும் பக்தர்களால் இக்கோயில் நிரம்பி வழியும்.

இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சாமி வீதி உலாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை 5.45 மணிக்கு தொடங்கியது. மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

அதிகாலை முதலே பல ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். விழாவி்ன் மற்ற முக்கிய நிகழ்ச்சிகளான தெப்ப உற்சவம் நாளையும், முத்துப்பல்லக்கு நாளை மறுதினமும் 20-்ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற உள்ளது.

படங்கள்: எம் சாம்ராஜ்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in