உடல்நிலையில் முன்னேற்றம்... டெல்லி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஜக்கி வாசுதேவ்!

ஜக்கி வாசுதேவ்
ஜக்கி வாசுதேவ்
Updated on
2 min read

மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகு கோவை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஆன்மிக குருவான ஜக்கி வாசுதேவுக்கு உலகம் முழுவதும் சீடர்கள் உள்ளனர். கோவையில் ஈஷா யோகா மையம் மூலம் தியானம், யோகா உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடும் தலைவலியால் ஜக்கி வாசுதேவ் பாதிக்கப்பட்டு வந்தார். அதனை தொடர்ந்து கடந்த 17ம் தேதி டெல்லியில் உள்ள இந்திரபரிஸ்தா அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவனையில் ஜக்கி வாசுதேவ்
மருத்துவனையில் ஜக்கி வாசுதேவ்

ஜக்கி வாசுதேவுக்கு பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வினித் சூரி தலைமையிலான மருத்துவ குழுவினர், அறுவை சிகிச்சை செய்தனர். இதனால், அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு நிறுத்தப்பட்டது. மிகவும் ஆபத்தான அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு ஜக்கி வாசுதேவ் மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உடல்நலனில் முன்னேற்றம் கண்டார். 10 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மருத்துவனையில் இருந்து வெளியே வந்து கும்பிட்ட ஜக்கி
மருத்துவனையில் இருந்து வெளியே வந்து கும்பிட்ட ஜக்கிHR Ferncrystal

முன்னதாக, அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி, ஜக்கி வாசுதேவ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், இதுகுறித்து கூறிய அவர், “உலகளாவிய நன்மைக்கான ஜக்கி வாசுதேவின் அர்ப்பணிப்பு, புத்தி கூர்மை மற்றும் அவரின் நகைச்சுவை உணர்வு அனைத்தும் அப்படியே சிறப்பாக உள்ளது. அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இது ஒரு நற்செய்தியாக இருக்கும்” என்றார். ஜக்கி வாசுதேவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினருக்கு ஈஷா அறக்கட்டளை நன்றி தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in