கோயில்கள் இளம்வயதினரை ஈர்க்கும் இடமாகவும் மாற வேண்டும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் அடடே யோசனை

இஸ்ரோ தலைவர் சோமநாத்
இஸ்ரோ தலைவர் சோமநாத்

’கோயில்கள் என்பவை வயதானவர்களுக்கு மட்டுமானவை என்றில்லாது, இளைஞர்களை ஈர்க்கும் இடமாகவும் மாற வேண்டும்’ என்று ஆலோசனை பகிர்ந்திருக்கும் இஸ்ரோ தலைவர் சோமநாத், அதற்கான முன்னோடி யோசனை ஒன்றையும் முன்வைத்திருக்கிறார்.

”ஆன்மிக தலங்கள் என்பவை முதியோர்கள் மட்டுமே இறைவன் நாமத்தை உச்சரிக்கும் இடமாக இருப்பதை மாற்றி, சமுதாயத்தை மாற்றும் இடமாகவும், இளைஞர்களை ஈர்க்கும் இடமாகவும் அமைய வேண்டும்” என்று இஸ்ரோ அமைப்பின் தலைவர் எஸ்.சோம்நாத் வலியுறுத்தி உள்ளார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இன்றைய தினம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீஉதியன்னூர் தேவி கோவிலின் விழா ஒன்றில் பங்கேற்று, அங்கே தனக்கான விருதை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயரிடம் இருந்து சோம்நாத் பெற்றார். தொடர்ந்து விழா மேடையில் அவர் பேசுகையில் இந்த ஆலோசனையை வழங்கினார்.

தற்காலத் தலைமுறையினர் மத்தியில் கோயில்கள் என்பவை முதியோருக்கான இடமாக இருப்பதையும், இளம் வயதினர் மத்தியில் கோயில்களுக்கு செல்லும் போக்கு குறைந்து வருவதையும் விவாதத்துக்கு உள்ளாக்கும் வகையில் இஸ்ரோ தலைவரின் இன்றைய கருத்து அமைந்துள்ளது.

‘நாடு முழுவதும் உள்ள கோயில்களின் நிர்வாகங்கள் இளைஞர்களை ஆன்மிக தலங்களுக்கு ஈர்க்கும் வகையில் செயல்பட வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார். அதன்பொருட்டு தன் பங்குக்கு யோசனை ஒன்றையும் அந்த விழா மேடையில் சோம்நாத் பதிவு செய்தார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இஸ்ரோ தலைவர் சோம்நாத்

"இந்த விருது வழங்கும் விழாவுக்கு இளைஞர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர்களின் எண்ணிக்கை ஏனோ கணிசமாகக் குறைந்திருக்கிறது. இளைஞர்களை கோவில்களுக்கு ஈர்க்கும் வகையில் கோவில் நிர்வாகங்கள் செயல்பட வேண்டும். இதன்பொருட்டு கோவில்களில் நூலகங்களை அமைக்க அவர்கள் ஏன் முன்வரக்கூடாது?" என சோம்நாத் கேள்வி எழுப்பினார்.

’இதுபோன்ற முயற்சிகள் இளைஞர்களை கோயில்களுக்கு ஈர்க்கவும், மாலை மற்றும் ஓய்வு நேரங்களில் பல்வேறு விஷயங்களைப் பற்றி வாசிக்கவும் விவாதிக்கவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவும்’ என்று சோம் நாத் நம்பிக்கை தெரிவித்தார். "கோயில் நிர்வாகங்கள் அதற்கான திசையில் செயல்பட்டால், அது பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும்" என்று அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...


லிவிங் டூ கெதர் வாழ்க்கை... நடிகை இறந்த ஒரே வாரத்தில் சின்னத்திரை நடிகரும் தற்கொலை!

சிறுவன் உயிரிழந்த விவகாரம்... குற்றாலம் அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு!

அதிர்ச்சி... 4 மாதங்களில் 430 கொலைகள்... கதி கலங்க வைக்கும் புள்ளி விவரம்!

இசையமைப்பாளர் ரஹ்மான் மகளின் புது அவதாரம்... நெகிழ்ச்சி பதிவு!

அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பை எந்த அரசாலும் மாற்ற முடியாது... அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in