‘வெளிநாட்டு நிதிக்கு தடையில்லை’ அயோத்தி ராமர் கோயிலுக்கு அரசு தாராளம்!

வரைபடமாக அயோத்தி ராமர் கோயில்
வரைபடமாக அயோத்தி ராமர் கோயில்
Updated on
1 min read

அயோத்தியில் நிறைவுபெற்று வரும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி பெற மத்திய அரசு அனுமதித்து உள்ளதாக, ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்று வரும் ராமர் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் அதன் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. 2024, ஜனவரி மத்தியில் ராமர் கோயிலுக்கான கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற உள்ளன. ராமர் கோயில் கட்டுமானப் பணிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை இயன்ற வகையில் செய்து வருகின்றனர்.

பறவை பார்வையில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள்
பறவை பார்வையில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள்

அதே போன்று வெளிநாடு வாழ் இந்தியர்கள், அங்கே பணிபுரிவோர் உள்ளிட்டோரும் அயோத்தி கோயிலுக்கு நன்கொடை வழங்க விரும்பினர். இவர்களை ஒருங்கிணைக்கவும், அயோத்தி ராமர் கோயில் திருப்பணியின் பெயரிலான சமூக விரோதிகளின் மோசடி முயற்சிகளை தடுக்கவும் ராமஜென்ம பூமி டிரஸ்ட் விரும்பியது. இது தொடர்பாக அறக்கட்டளையினர் மத்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோளின் கீழ் அனுமதியும் கிடைத்துள்ளது.

இதன்படி, அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு வெளிநாட்டிலிருந்து நன்கொடை வழங்க விரும்புவோர், அதற்கான வங்கிக்கணக்கு வாயிலாக முறைப்படி அனுப்ப முடியும். இது தொடர்பாக ராமஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச்செயலர் சம்பத் ராய் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இறுதிகட்டத்தில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள்
இறுதிகட்டத்தில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள்

அந்த பதிவில், “வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குபடுத்துதல் சட்டப்படி, ராமர் கோயில் கட்டுமானத்துக்கு இந்தியாவுக்கு வெளியிலிருந்து நன்கொடைகள் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி வெளிநாட்டு நன்கொடைகளை, ராமர் கோயில் அறக்கட்டளையின் டெல்லி எஸ்.பி.ஐ வங்கி கணக்கு வாயிலாக மட்டுமே அனுப்பலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in