பவுர்ணமி கிரிவலம் செல்கிறீர்களா... தென்னக ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

ஐப்பசி மாத பவுர்ணமியன்று தரிசனம் செய்யவும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக நாளை மற்றும் நாளை மறுதினம் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையர் கோயில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் 28, 29ம் தேதிகளில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

வரும் 28ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் அதிகாலை 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.  அதேபோல் மறுநாள் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 3.05  மணிக்கு மறுமார்க்கமாக கிளம்பும் இந்த ரயில் சென்னைக்கு 9.05 மணிக்கு சென்றடையும்.

வழியில் துரிஞ்சாபுரம், அகரம்சிப்பந்தி, போளூர், ஆரணி ரோடு, கண்ணமங்கலம், கணியம்பாடி ரயில் நிலையங்களில் நின்று வரும். பின்னர் இந்த ரயில், வேலூர் கன்டோன்மென்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு வண்டி எண் 06034 ஆக வழக்கம்போல புறப்பட்டு செல்லும். 

இரு மார்க்கங்களிலும் நேரடியாக திருவண்ணாமலை, சென்னை கடற்கரை நிலையங்களுக்கு டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். வண்டி எண் 06690 மயிலாடுதுறை-விழுப்புரம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில், வண்டி எண் 06129 ஆக விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வரை இயக்கப்படுகிறது என தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in