திருமுண்டீச்சரம் கோயிலில் ஆளுநர் ரவி சாமி தரிசனம் - கல்வெட்டுகளை ஆய்வு செய்தார்!

ஆளுநர் ரவி சாமி தரிசனம்
ஆளுநர் ரவி சாமி தரிசனம்
Updated on
1 min read

திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமுண்டீச்சரம் சிவலோகநாதர் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அங்குள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்தார்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள திருமுண்டீச்சரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற செல்வாம்பிகை உடனமர் சிவலோகநாதர் ஆலயம் உள்ளது. அப்பரால் பாடல் பெற்ற இந்த தலமானது, இறைவனின் காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட ஆலயமாகவும் திகழ்கிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.

இக்கோயில் கி.பி.943ல் வெள்ளாங்குமரன் மன்னரால் கருங்கல்லில் கட்டப்பட்டது. வீரபாண்டியன் என்னும் மன்னனுக்கு இப்பெருமான் திருநீற்றுப்பை (பொக்களம்) தந்தார் கல்வெட்டில் பொக்களம் கொடுத்த நாயனார் என்றும் ஆற்றுத்தளி பெருமான் ஆற்றுத்தளி மகாதேவர் என்றும் குறிக்கப்படுகின்றார். இந்த கோயிலின் தொன்மை விளக்கும் செய்திகள் கல்வெட்டுகளில் உள்ளன.

ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி

தொன்மைக்கும், சிறப்புக்கும் பெயர் பெற்ற இக்கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று சாமி தரிசனம் செய்துவிட்டு கல்வெட்டுகளை ஆய்வு செய்தார். முன்னதாக சிவலோலநாதர் மற்றும் செல்வாம்பிகை அம்மனை தரிசனம் செய்தார். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினரும் செய்தனர்.

ஆளுநர் வருகையை முன்னிட்டு கோயிலுக்குள் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in