ஜாக்கிரதை... பொள்ளாச்சி அருகே கோயிலைச் சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்: பக்தர்களுக்குத் தடை!

பொள்ளாச்சி ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்
பொள்ளாச்சி ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்

பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளதால், தடுப்புகள் அமைத்து கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தை ஒடியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழை பெய்து வருவதால், நீரிநிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக கவியருவி உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

காட்டாற்று வெள்ளம் பாய்ந்து செல்லும் காட்சி
காட்டாற்று வெள்ளம் பாய்ந்து செல்லும் காட்சி

இந்த நிலையில் பொள்ளாச்சி அடுத்த பாலாற்றின் மையப் பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. அவ்வழியாக பாலாறு, உப்பாறு உள்ளிட்ட ஓடைகள் மற்றும் சிற்றாறுகளில் இருந்து வரும் தண்ணீர் கடந்து செல்கிறது. நேற்று பெய்த கனமழையின் காரணமாக இப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது.

கோயிலைச் சூழ்ந்துள்ள வெள்ளம்
கோயிலைச் சூழ்ந்துள்ள வெள்ளம்

இதையடுத்து பாதுகாப்பு கருதி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதே போல் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஓடைகள் மற்றும் வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குளிக்க, துணி துவைக்க, கால்நடைகளை மேய்க்க நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in