குழந்தை வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்... மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்ட பெண்கள்!

குழந்தை வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்... மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்ட பெண்கள்!
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சித்தரின் ஜீவ சமாதியில் வழங்கப்பட்ட பிரசாதத்தை பெண்கள் மண்டியிட்டு சாப்பிட்டு குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில், கடந்த, 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பரதேசி ஆறுமுக சுவாமிகள் என்பவரின் ஜீவசமாதி உள்ளது. அந்த ஜீவ சமாதியில் கோவில் கட்டி, கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆடி அமாவாசையன்று சித்தருக்கு குருபூஜை செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி ஆடி அமாவாசை தினமான நேற்று, 187ம் ஆண்டு குரு பூஜை விழா நடைபெற்றது. அதை முன்னிட்டு ஜீவ சமாதியில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன.  சுவாமிக்கு படையலிட்ட பிரசாதம், குழந்தை இல்லாத பெண்களுக்கு வழங்கப்பட்டது. அந்த பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளும் பெண்கள் குளக்கரையில் வைத்து மண் சோறு சாப்பிட்டு வழிபட்டால், குழந்தை வரம் கிடைக்கும் என்பது அப்பகுதிமக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை பெண்கள் மடியில் ஏந்தி வாங்கி, கோவில் குளக்கரையில் வைத்து, மண்டியிட்டு மண் சோறு சாப்பிட்டு, குழந்தை வரம் வேண்டி வழிபட்டனர். குழந்தை இல்லாமல், இங்கு பிரார்த்தனை செய்து குழந்தை பெற்ற தம்பதியர்கள் ஏராளமானோர் வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in