கோவையில் பக்தி பரவசம்... ரத்தம் சொட்ட சொட்ட பேரணியாக வந்த பக்தர்கள்!

செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா
செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் அம்மனை அழைப்பதற்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள் கத்திபோடும் திருவிழா நடைபெற்றது.

கோவை சாய்பாபா காலனியில் உள்ள விநாயகர் கோயிலில் இன்று காலை கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கியது. இதில் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேஸ்கோ, தீஸ்கோ என்று பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர். இதனால் பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது.

கத்தியால் கைகளில் வெட்டிக்கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
கத்தியால் கைகளில் வெட்டிக்கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். இந்த திருமஞ்சன பொடியை வைத்தால் 3 நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த ஊர்வலமானது முக்கிய வீதிகளான மேட்டுப்பாளையம் சாலை, பூ மார்க்கெட் வழியாக வந்து டவுன்ஹாலில் உள்ள சௌடேஸ்வரி கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு விசேஷ பூஜை, திருக்கல்யாணமும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசம் அடைந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...


அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!

உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்

ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in