சந்திர கிரகணம்... திருப்பதி கோயில் நடை 8 மணி நேரம் அடைக்கப்படுகிறது!

சந்திர கிரகணம்... திருப்பதி கோயில் நடை 8 மணி நேரம் அடைக்கப்படுகிறது!

சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி கோயில் நடை 8 மணி நேரம் அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். கடந்த மாதம் புரட்டாசி என்பதால் ஒரு நாள் முழுக்க காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தற்போது கோயிலுக்கு வரும் பக்தர் கூட்டம் சற்றே குறைந்துள்ளது.

ஆனாலும், பக்தர்கள் தங்கள் பயணத்தை திட்டமிட திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி கோயில் நடை 8 மணி நேரம் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 29-ம் தேதி சந்திர கிரகணம் என்பதால், நாளை மறுநாள் அதாவது சனிக்கிழமை இரவு 7.05 மணி முதல் 29-ம் தேதி அதிகாலை 3.15 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, சுப்ரபாத சேவைக்கு பிறகு காலை 5.15 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் ஏழுமலையான் கோயில் நடை சுமார் 8 மணி நேரம் வரை சாத்தப்படும்.

மேலும், நாளை சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம் போன்றவை ரத்து செய்யப்படும். திருமலையில் உள்ள அனைத்து தலங்களிலும் அன்ன பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நிறுத்தப்படும். எனவே இதனை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்களது யாத்திரையை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in