திருக்குற்றாலநாத சுவாமி கோயில் ஐப்பசி விசு திருவிழா; தேரோட்டம் கோலாகலம்!

திருக்குற்றாலநாத சுவாமி கோயில் ஐப்பசி விசு திருவிழா; தேரோட்டம்  கோலாகலம்!

திருக்குற்றாலநாதர் சுவாமி திருக்கோயில் ஐப்பசி விசு திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. பக்தர்கள் திரண்டிருந்து வடம் பிடித்தனர்.

தென்காசி மாவட்டம்,  குற்றாலம் திருக்குற்றாலநாதர் சுவாமி திருக்கோயிலில் வருடந்தோறும் ஐப்பசி மாத விசு திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், கடந்த அக்டோபர் 9-ம் தேதி திருக்குற்றாலநாதர் சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி மாத விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்த நிலையில், பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான திருவிலஞ்சி குமாரர் கோயில் சமேத வள்ளி தெய்வானையை குற்றாலநாதர் கோயிலுக்கு அழைத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இன்று அக்டோபர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் தேர் முருகர் தேர் திருக்குற்றாலநாத சுவாமி தேர் செண்பக குழல்வாய்மொழி அம்மன் தேர் ஆகிய நான்கு திருத்தேர்கள் அடங்கிய தேரோட்ட நிகழ்வும் வெகு சிறப்பாக  நடைபெற்றது.

அதேபோல், வரும் 16-ம் தேதி சித்திர சபையில் அருள்மிகு நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும், பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நாளை மகாளய பட்ச அமாவாசை: இந்த விஷயங்களை மறக்காதீங்க!

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள்  அதிர்ச்சி!

இந்த வருஷம் கேம்பஸ் இன்டர்வியூ கிடையாது.. பிரபல ஐடி நிறுவனம் அறிவிப்பு!

செம மாஸ் அறிவிப்பு... இன்று மெட்ரோ ரயிலில் பயணிக்க கட்டணம் கிடையாது!

மனைவி தற்கொலை... விரக்தியில் உயிரையிழந்த கணவர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in