தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை எப்போது?... அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை எப்போது?... அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு!

நேற்று பிறை தென்படாததால் தமிழ்நாட்டில் ரமலான்  பண்டிகை இன்று இல்லை எனவும்,  நாளை (ஏப்ரல் 11) கொண்டாடப்படும் என்றும் தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகை இஸ்லாமியர்களால் மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பார்கள். நோன்பு காலத்தில்  சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் இருப்பார்கள். இப்படி கடும் விரதம் இருந்து இந்த பண்டிகை அவர்கள் கொண்டாடுவார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரமலான் மாதம் தொடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பிறை பார்க்கப்பட்டு ரம்ஜான் மாதம் தொடங்கியது. இந்நிலையில், நேற்று ஏப்ரல் 9-ம் தேதி பிறை தென்படாததால்  இன்று ரமலான் கொண்டாடப்படாது. நாளை (ஏப்ரல் 11) தான்  ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.    

"ஹிஜ்ரி 1445 ரமலான் மாதம் 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 09-04-2024 தேதி அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் 11-04-2024 தேதி அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் பித்ர் வியாழக்கிழமை 11-04-2024 தேதி கொண்டாடப்படும்" என தலைமை ஹாஜி தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் நாளை  அரசு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள் அரசு அலுவலகங்கள் வங்கிகள் இயங்காது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in