சபரிமலை பக்தர்களுக்கு குட்நியூஸ்: விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி!

சபரிமலை
சபரிமலை

கேரளா மாநிலம் சபரிமலைக்கு விமானத்தில் பயணிக்கும் பக்தர்கள்  விமானத்தில் இருமுடி பையை எடுத்துச் செல்லலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இருமுடி செட்
இருமுடி செட்

கேரளாவில் உள்ள சபரிமலைக்கு ஆண்டு தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து சென்று வருகின்றனர். சபரிமலை யாத்திரையின் போது, இருமுடி கட்டி அதை தலையில் சுமந்து எடுத்துச் செல்வது ஐதீகம். அந்த இருமுடி பையைப் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு  விமானத்தில் எடுத்துச் செல்ல இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி 15-ம் தேதி வரை விமானத்தில் தேங்காயுடன் இருமுடி கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இரு முடி பை
இரு முடி பை

முறையான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின் எடுத்து செல்லலாம் எனவும்,  எக்ஸ்-ரே, இடிடி (வெடிகுண்டு சோதனை கருவி), உடல் பரிசோதனை ஆகியவற்றை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய பிறகே பக்தர்கள் தங்களது இருமுடியை விமானங்களில் கொண்டு செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக இருமுடி பைகளில் தேங்காய்கள் கொண்டு செல்லப்படும் என்பதாலும், தேங்காய்கள் எரியும் தன்மை கொண்டவை என்பதாலும் இருமுடி பையை எடுத்துச் செல்ல தடை விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளில் குறுகிய காலத்துக்கு தளர்வுகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இனி இருமுடி பைகளை பக்தர்கள் தங்களது கைப்பைகளிலேயே கொண்டுசெல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சபரிமலை வரும் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


இதையும் வாசிக்கலாமே...

ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா

நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத அக்கா, தம்பி!

அடுத்த சர்ச்சை... தேசிய கீதத்தை அவமானப்படுத்திய மன்சூர் அலிகான்!

மன்சூர் அலிகான் தப்புன்னா... ரஜினி பேசுனதும் தப்பு தான்!

அடாவடி வசூல்... கழிவறை கட்டண குத்தகைதாரருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in