5000 போலீஸார் பாதுகாப்பு இருக்கும் போதே பஸ்சை திருடிச் சென்ற மர்மநபர்... திருப்பதியில் பரபரப்பு!

திருப்பதி.
திருப்பதி.

திருப்பதி மலையில் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படும் மின்சார பேருந்து ஒன்று மர்மநபரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி மலையில் பக்தர்களின் இலவச போக்குவரத்து வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் சார்பில்  10 மின்சார பேருந்துகளும், சில டீசல் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அவை நேற்று இரவு பக்தர்களின் சேவைக்காக இயக்கப்பட்ட பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.  அப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் ஒரு பேருந்தை இன்று அதிகாலை முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பேருந்தை மர்மநபர் ஒருவர் இன்று காலை 3 மணி அளவில் மலையில் இருந்து திருப்பதிக்கு ஓட்டிச் சென்றது தெரிய வந்துள்ளது. எனவே, இதுகுறித்து தேவஸ்தான போக்குவரத்து துறை அதிகாரிகள் திருமலை போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

திருமலையில் இயக்கப்படும்  பேருந்து
திருமலையில் இயக்கப்படும் பேருந்து

இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்துள்ள திருமலை போலீஸார் இலவச பேருந்தை ஓட்டிச்சென்ற அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். பேருந்தை  ஓட்டிச் சென்றவர் எந்த வழியாகச் சென்றார் என்பதை கண்டுபிடிப்பதற்காக திருப்பதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் அனைத்து டோல்கேட்டுகளிலும் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்யும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவிற்காக அங்கு 5000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவ்வளவு பாதுகாப்பு இருக்கும்போது மர்ம நபர் ஒருவர் பேருந்தைக் கடத்திச் சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது திருப்பதி மலையின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in