கடன் தீரும்... கவலைகள் மாறும்... இன்று நம்பிக்கையுடன் இதைச் செய்து பாருங்க!

ஆகாச தீபம்
ஆகாச தீபம்

இந்தப் பண்டிகைக் காலத்தில் நாம் ஏற்றி வைத்து வழிபடும்  ஆகாச தீபமானது  நம்  கடன்களை தீர்த்து வைத்து கவலைகளை போக்கிவிடும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. 

ஐப்பசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் கார்த்திகை மாதம் அமாவாசை வரை ஒரு மாதம் முழுவதும் ஆபாச தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்பது ஐதீகம். அதாவது அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் அடுத்த அமாவாசை வரையுள்ள முப்பது நாட்களும் தினசரி சூரியன் அஸ்தமிக்கும்  மாலை வேளையில் ஆகாச தீபம் ஏற்றப்பட வேண்டும்.

வீட்டின் அருகிலோ அல்லது ஆலயத்திற்கு அருகிலோ ஒரு பெரிய கம்பம் நட்டு அதன் நுனியில் எட்டு திரிகளுடன் கூடிய  எள் தீபம் ஏற்ற வேண்டும். வீட்டு மொட்டை மாடியில் கூட ஏற்றலாம். இதன் வெளிச்சமானது எட்டு திசைகளிலும் பரவ வேண்டும். இந்த தீபத்தை நம் பிரார்த்தனைகளை நினைத்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாதம் முழுவதும் ஆகாச தீபம் ஏற்ற முடியாதவர்கள் கடைசி மூன்று நாட்களாவது அல்லது ஒரு நாளாவது அருகிலுள்ள மஹாவிஷ்ணு கோயில் சென்று இவ்வாறு தீபம் ஏற்றி வைத்து நமஸ்கரிக்கலாம். இதனால் அனைத்து துன்பங்களும் நீங்கும். குறிப்பாக கடன்கள் அனைத்தும் தீரும். லட்சுமி கடாட்சம் பெருகும்.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!

வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!

திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in