பக்தர்கள் கண்ணீர்... சந்தனப் பேழையில், தியான நிலையில் பங்காரு அடிகளார் உடல் அடக்கம்!

பங்காரு அடிகளார்
பங்காரு அடிகளார்

ஆதிபராசக்தியின் திருவருளில் ஐக்கியமாகி விட்ட மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் உடல் சித்தர்கள் உடல் அடக்கம் செய்யப்படுவது போல சந்தன பேழையில் தியான நிலையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

லட்சோப லட்சம் பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்பட்டவர் வேல்மருவத்தூர் பங்காரு அடிகளார். மேல்மருவத்தூரில் இவர் தொடங்கிய ஆதிபராசக்தி சித்தர் பீடம்  ஓம் சக்தி என்ற குரலை  எங்கும் ஒலிக்கச் செய்தது. ஆதிபராசக்தி அம்மனின் ரூபமாக பங்காரு அடிகளாரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  அம்மாவை தரிசனம் செய்தால், அவரது அருள்வாக்கு கேட்டால்  துன்பங்கள் நீங்கும்  என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தங்களின் ஒரே நம்பிக்கையாக இருந்த பங்காரு அடிகளார் நேற்று இயற்கை எய்தியதை  அடுத்து அவரது  முகத்தை  இறுதியாக ஒருமுறை  பார்த்து விடலாம் என்று ஆயிரக்கணக்கான  பக்தர்கள்  மேல்மருவத்தூருக்கு வந்துள்ளனர். பங்காரு அடிகளார் உடல் பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக  வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள்,  காவல்துறை அதிகாரிகள்,  அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி
அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி

ஆதிபராசக்தியின் பாதங்களில் ஜோதியாக கலந்து விட்ட பங்காரு அடிகளார் உடலானது இன்று மாலையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. சந்தன பேழையில் வைத்து தியான நிலையில் பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக ஆதிபராசக்தி சித்தர் பீட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனிதர்கள் மரணித்தால் உடல் அடக்க செய்யப்படும்போது படுக்கை வசத்தில்தான் அடக்கம் செய்வார்கள். ஆனால் சித்தர்களுக்கு செய்வதைப் போல தியான நிலையில்  அமர வைத்து பங்காரு அடிகளாரின் உடன் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி!

செம மாஸ்... நடுரோட்டில் தெறிக்க விட்ட ரஜினி... வைரலாகும் வீடியோ!

பிரபல நடிகை சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு! திரையுலகில் பரபரப்பு!

நாளை விண்ணில் பாய்கிறது 'ககன்யான்' சோதனை விண்கலன்... தொடங்கியது கவுண்டவுன்!

லெஸ்பியன்னு சொல்லு... கெத்தா இருக்கும்; சர்ச்சைக் கிளப்பும் ட்ரைலர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in