பக்ரீத் கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதை தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மிக விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகளை நடத்தி தங்கள் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.

இஸ்லாமியர்களின் இறைத்தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் ஏக இறைவனின் கட்டளையை ஏற்று தன் ஒரே மகனான இஸ்மாயிலைப் பலியிடத் துணிந்தார். இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உணர்த்தும் வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரசித்திபெற்ற நாகூர் தர்கா, குமரி, நெல்லை, மதுரை, கோவை, சென்னை என தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று காலையில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

பக்ரீத் பண்டிகை நாளில் ஏழைகளின் பசியைப் போக்கும் வகையில் ஆட்டு இறைச்சியை குர்பானி வழங்கும் முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறை தூத்துக்குடி மாவட்ட எட்டயபுரத்தில் உள்ள ஆடுசந்தையில் 15 கோடி ரூபாய்க்கு ஆடுகளும் விற்பனையானது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in